Images
  • blue stars dormitory
    (படம்: Google Street View)

Blue Stars தங்கும் விடுதி, கிருமி தொற்றும் அபாயம்மிக்க பகுதிகளின் பட்டியலில் இருந்து நீக்கம்

சிங்கப்பூரில் நேற்றுப் புதிதாக நால்வருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அவர்களில் ஒருவர் ஸ்வீடனிலிருந்து திரும்பிய சிங்கப்பூரர்.

இந்தோனேசியாவிலிருந்து வந்த இருவர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள்.

எஞ்சியவர் ரஷ்யாவிலிருந்து வந்த குறுகிய கால வருகை அட்டை வைத்திருப்பவர். அவர் சிங்கப்பூரில் உள்ள தனியார்ப் பள்ளியில் பயில்பவர்.

நால்வரும் சிங்கப்பூருக்கு வந்ததிலிருந்து வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவர்களையும் சேர்த்து இங்கு கிருமித்தொற்று உறுதியானோர் மொத்த எண்ணிக்கை 58,143ஆனது.

கடந்த 10 நாளாக, சமூக அளவிலோ, வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியிலோ யாரும் பாதிக்கப்படவில்லை.

இந்நிலையில், எண் 3 கியான் டெக் லேனில் (Kian Teck Lane) அமைந்திருக்கும் Blue Stars தங்கும் விடுதியைக் கிருமி தொற்றும் அபாயம்மிக்க பகுதிகளின் பட்டியலில் இருந்து அமைச்சு நீக்கியுள்ளது. அங்கு கடந்த 28 நாள்களாக யாருக்கும் கிருமித்தொற்று அடையாளம்காணப்படவில்லை.  

Top