Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம் -0.2 விழுக்காட்டிற்குக் குறைந்தது

சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம், கடந்த மாதம், ஆண்டு அடிப்படையில், பூஜ்யத்துக்குக் கீழ், 0.2 விழுக்காட்டுக்குக் குறைந்தது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரின் அடிப்படைப் பணவீக்கம், கடந்த மாதம், ஆண்டு அடிப்படையில், பூஜ்யத்துக்குக் கீழ், 0.2 விழுக்காட்டுக்குக் குறைந்தது.

அதற்கு முந்தைய மாதம் அது பூஜ்யத்துக்குக் கீழ், 0.3 விழுக்காட்டுக்குக் குறைந்திருந்தது.

இவ்வாண்டு முழுமைக்குமான அடிப்படை பணவீக்கம் சற்று மேம்படும் என அதிகாரிகள் முன்னுரைத்துள்ள நிலையில், பண வீக்கம் சற்று குறைந்தது.

சேவைகளுக்கான் கட்டணங்கள் கடந்த மாதம், பூஜ்யத்துக்குக் கீழ், 0.3 விழுக்காடு குறைந்தது அதற்கு ஒரு காரணம்.

துணைப்பாட வகுப்புகளுக்கான கட்டணங்களும், மற்ற கட்டணங்களும், அதிகரித்ததை அது பிரதிபலிக்கிறது.

தனியார் போக்குவரத்து, தங்குமிடம் போன்றவற்றுக்கான செலவுகள், அடிப்படைப் பணவீக்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டா.

ஒட்டுமொத்தப் பணவீக்கம், கடந்த மாதம் பூஜ்யம் புள்ளி 2 விழுக்காட்டிற்கு அதிகரித்தது.

அதற்கு முந்திய மாதத்தை விட அது சற்றே அதிகம்.

தனியார் போக்குவரத்து, தங்குமிடம் போன்றவற்றுக்கான செலவுகள் அதிகரித்தது அதற்குக் காரணம். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்