Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் தகுதியிருந்தும் சுமார் 400,000 பேர் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை

சிங்கப்பூரில் எத்தனை பேர் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் தகுதியிருந்தும் சுமார் 400,000 பேர் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை

(படம்:TODAY/Ili Nadhirah Mansor)

சிங்கப்பூரில் எத்தனை பேர் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் எழுத்து மூலம் பதிலளித்தார்.

செப்டம்பர் 5ஆம் தேதி நிலவரப்படி சிங்கப்பூர்வாசிகளில் 930,000 பேர் ஒருமுறைகூட COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் 12உம், அதற்கு குறைவான வயதுடையோர்.
அந்த வயதுப் பிரிவினருக்குத் தடுப்பூசி போட இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

மீதமுள்ள 400,000 பேரில் சுமார் 100,000 பேர் 60உம், அதற்கு மேற்பட்ட வயதுமுடைய மூத்தோர்.

12 இலிருந்து 59 வயதுக்கு இடைப்பட்டோரில் சுமார் 300,000 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.

சுமார் 1,000 பேர் மருத்துவக் காரணங்களால்
COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாமல் போனது. அவர்கள் பற்றி நிபுணர்களிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் தெரிவித்தார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்