Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் வேலை தேடுவோரைவிட வேலை வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன: மனிதவள அமைச்சர்

சிங்கப்பூரில் வேலை தேடுவோரைவிட வேலை வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன: மனிதவள அமைச்சர்

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் வேலை தேடுவோரைவிட வேலை வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாய் மனிதவள அமைச்சர் டான் சீ லெங் (Tan See Leng) தெரிவித்துள்ளார்.

Panasonic நிறுவனத்தில் ஆள்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, ஆள்குறைப்புப் பணிக்குழு மாற்று வேலை தேடித்தரும் என்று எதிர்பார்ப்பதாக டாக்டர் டான் கூறினார்.

தற்போதைய சாதகமான ஊழியர் சந்தை நிலவரத்தை அது பயன்படுத்திக் கொள்ளும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

700 ஊழியர்களை ஆள்குறைப்புச் செய்யவிருப்பதாக நேற்று Panasonic நிறுவனம் அறிவித்தது.

உலகளாவிய வர்த்தக நிலவரம் சவால்மிக்கதாய் இருப்பதால் ஆள்குறைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாய் நிறுவனம் குறிப்பிட்டது.

விருந்தோம்பல், விமானப் போக்குவரத்து போன்ற துறைகளும் சவால்களை எதிர்நோக்கலாம் என்று மனிதவள அமைச்சர் கூறினார்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்