Images
  • people
    கோப்புப் படம்: Ngau Kai Yan

சிங்கப்பூர்: வாழும்போதே சிறுநீரக தானம் செய்ய முன்வருவோரின் எண்ணிக்கை உயர்வு

சிங்கப்பூரில், வாழும்போதே மற்றவருக்கு சிறுநீரகத்தைத் தானம் செய்ய முன்வருவோரின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் சற்று அதிகரித்திருப்பதாக தேசிய சிறுநீரக அறநிறுவனம் கூறியுள்ளது.

2012இல் 28ஆக இருந்த அந்த எண்ணிக்கை, சென்ற ஆண்டு நாற்பதாக உயர்ந்தது.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்வது அதிக சிரமமானதாவும், செலவுமிக்கதாவும் இருக்கும்போது தேசிய சிறுநீரக அறநிறுவனம் ஆதரவளிக்க முன்வரும்.

வாழும் போதே சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வருவோருக்கு நிதியுதவி வழங்குவது திட்டத்தின் இலக்கு.

அத்திட்டத்தின் கூடுதல் மேம்பாடு பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Top