Images
  • gg

சிங்கப்பூரில் சமூக அளவில் 4 பேர் பாதிப்பு

சிங்கப்பூரில், புதிதாக 13 பேரிடம் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களில் நால்வர் சமூக அளவில் பாதிக்கப்பட்டவர்கள்.

அவர்களில் இருவர் ஏற்கனவே பாதிக்கப்பட்டோருடன் நேரடித் தொடர்பில் வந்தவர்கள்.

அவர்களில் ஒருவர் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

எஞ்சிய இருவர் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் வராதவர்கள்.

வெளிநாட்டிலிருந்து வந்தோரில் 9 பேரிடம் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அவர்கள் சிங்கப்பூர் வந்ததிலிருந்து வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவில் உள்ளனர்.

அவர்களில் ஏழு பேர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்.

வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் யாருக்கும் பாதிப்பு இல்லை.

சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 62,236. 

Top