Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19: சிங்கப்பூரில் சமூக அளவில் 10 புதிய சம்பவங்கள்; வெளிநாட்டிலிருந்து வந்தவர்களில் 3 பேருக்குப் பாதிப்பு

சிங்கப்பூரில் சமூக அளவில் இன்று புதிதாக 10 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் சமூக அளவில் இன்று புதிதாக 10 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களில 8 பேர் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்கள் என்றும், ஐவர் முன்கூட்டியே தனிமைப்படுத்தப்பட்டதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மூவர் கண்காணிப்பின் மூலம் அடையாளம் காணப்பட்டனர்.

எஞ்சிய இருவர் முன்னைய கிருமித்தொற்றுச் சம்பவங்களுடன் தொடர்பற்றவர்கள்.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களில் மூவருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.

அவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள் அல்லது சிங்கப்பூர் நிரந்தரவாசிகள்.

வெளிநாட்டு ஊழியர் தங்கும்விடுதியில் யாருக்கும் பாதிப்பு இல்லை.

இன்று புதிதாக மொத்தம் 13 பேருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 62,276ஆக உள்ளது.

மாண்டோர் எண்ணிக்கை 34. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்