Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் புதிய லோர்னி (Lornie) பசுமைப் பாதை திறப்பு

சிங்கப்பூரின் ஆகப் புதிய பூங்கா இணைப்பான லோர்னி (Lornie) பசுமைப் பாதை இன்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் புதிய லோர்னி (Lornie) பசுமைப் பாதை திறப்பு

(படம்: NParks)

சிங்கப்பூரின் ஆகப் புதிய பூங்கா இணைப்பான லோர்னி (Lornie) பசுமைப் பாதை இன்று அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டுள்ளது.

1.76 கிலோ மீட்டர் நீளம் கொண்ட பசுமைப் பாதை, “Rewilding Plan” எனும் 10 கிலோ மீட்டர் இயற்கை மீட்புத் திட்டத்தின் ஒரு பகுதி.

கியெம் ஹோக் (Kheam Hock) ரோட்டையும் அப்பர் தாம்சன் (Upper Thomson) ரோட்டையும் லோர்னி பசுமைப் பாதை இணைக்கிறது.

நடப்பதற்கும் சைக்கிள் ஓட்டுவதற்கும் பாதைகள் இங்குள்ளன.

நூற்றுக்கும் அதிகமான மரங்கள், புதர்கள், மலர்கள் ஆகியவை இங்கு நடப்பட்டுள்ளன.

பசுமைப் பாதையின் திறப்பை முன்னிட்டு தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீயும் தொண்டூழியர்களும் இன்று மேலும் 150 மரங்களை நட்டனர்.

இன்னும் சில ஆண்டுகளில் லோர்னி பசுமைப் பாதை மழைக்காடு போன்று காட்சியளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த மூவாண்டுகளில் சிங்கப்பூரில் உள்ள 30க்கும் அதிகமான பகுதிகளில் இயற்கை மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இதுபோன்று சாலையோரமாக அமைந்துள்ள
பசுமைப் பாதைகளும் அவற்றுள் அடங்கும். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்