Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் மீடியாகார்ப்பின் முகக்கவசங்கள்

COVID-19 நோய்த்தொற்று உலக நாடுகள் அனைத்திலும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் மீடியாகார்ப்பின் முகக்கவசங்கள்

படம்: Mediacorp

COVID-19 நோய்த்தொற்று உலக நாடுகள் அனைத்திலும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரும் நோய்த்தொற்றால் பல வழிகளில் சிரமங்களைச் சந்தித்து வருகிறது.

இந்த இக்கட்டான சூழலைக் கடந்துவரவும் நம்பிக்கை இழக்காமல் இருக்கவும் சிங்கப்பூரின் ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் விதமாக மீடியாகார்ப் சில முகக்கவசங்களை வெளியிட்டுள்ளது.

Mask For The Nation என்ற போட்டியை உருவாக்கிய மீடியாகார்ப் “Singapore Together” என்ற கருப்பொருளில் தேசிய தினத்திற்காக முகக்கவசத்தை வடிவமைக்கும்படி பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்தது.

அதற்கு 3,000-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்தன.

அவற்றில் 55 வடிவமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இறுதியில் மூன்று முகக்கவசங்களின் வடிவமைப்புகள் வெற்றிபெற்றவையாக அறிவிக்கப்பட்டன.

வெற்றிபெற்ற மூன்று படைப்புகளை உருவாக்கியவர்களுக்கு ஆளுக்கு 1,000 வெள்ளி ரொக்கம் அல்லது பரிசுகள் வழங்கப்பட்டன.

வெற்றிபெற்ற மூன்று படைப்புகள்:

1. சோ சின் ஹுவி (Soh Xin Hui) Faces of Singapore

2. அன்வார் ரஃபியின் (Anwar Rafiee ) Singapore Together

3. ஷேரன் லியூவின் (Sharon Liew) - Let's Come Together and Stand as One

முகக்கவசங்களை https://www.maskforthenation.com என்ற இணையப்பக்கத்தில் வாங்கிக்கொள்ளலாம்.

ஒரு முகக்கவசத்தின் விலை 10 வெள்ளி. வரிகளும் இதரக் கட்டணங்களும் இதில் அடங்கமாட்டா. ஆக்ஸ்ட் 3-ஆம் தேதி முதல் அவை விநியோகிக்கப்படும்.

திரட்டப்படும் தொகை SG Enable அமைப்பு நிர்வகிக்கும் மீடியாகார்ப் Enable நிதிக்குச் செல்லும். உடற்குறை உடையோருக்கு ஆதரவளிக்க அது பயன்படுத்தப்படும்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்