Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

மலாய் மாணவர்கள் 10,000க்கும் அதிகமானோருக்கு உயர்கல்வி மானியம் -Mendaki

மலாய் சுய உதவிக் குழு Mendaki இன் உயர்கல்வி மானியத் திட்டத்தின் மூலம் 10,000க்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

மலாய் சுய உதவிக் குழு Mendaki இன் உயர்கல்வி மானியத் திட்டத்தின் மூலம் 10,000க்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் அவர்களுக்கு 45 மில்லியன் வெள்ளி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

மலாய் மாணவர்கள் முதல் பட்டயம் அல்லது பட்டக்கல்வி பெறுவதற்கு உதவும் வகையில் மானியம் வழங்கப்படுகிறது.

மாணவர்கள் கல்வியைத் தொடர்வதற்கு பணம் தடையாக இருக்கக்கூடாது என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (Masagos Zulkifli) கூறினார்.

மலாய் முஸ்லிம் சமூகத்தை முன்னேற்றுவதற்குச் சம்பந்தப்பட்ட பங்காளிகளுடன் Mendaki பணியாற்றி வருவதாக அதன் தலைவருமான அவர் சொன்னார்.

அடுத்த தலைமுறைத் தலைவர்களை வளர்ப்பது, மலாய் சமூகத்தின் தகுதியை மேம்படுத்துவது உள்ளிட்ட அம்சங்களில் கவனம் செலுத்தப்படுவதாகவும் திரு. மசகோஸ் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்