Images
  • shanmugam
    (படம்: Matthew Mohan)

பயங்கரவாத முறியடிப்பு நடவடிக்கை தொடர்பில் 37 பேரிடம் விசாரணை: உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை

சிங்கப்பூரின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, பயங்கரவாத முறியடிப்பு நடவடிக்கையின் தொடர்பில் 37 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது.

அவர்களில் 14 பேர் சிங்கப்பூரர்கள். எஞ்சியோர் வெளிநாட்டவர்கள்.

சிங்கப்பூரர்களில் 10 பேர் ஆண்கள். நான்கு பேர் பெண்கள்.

அவர்கள் 19லிருந்து 62க்கு இடைப்பட்ட வயதுடையவர்கள்.

அவர்களில் பெரும்பாலோர், பிரான்சில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களின் தொடர்பில், வன்முறையையோ, சமூக ரீதியான பதற்றத்தையோ ஏற்படுத்தும் கருத்துகளைச் சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.

அவர்கள் தாக்குதல் நடத்தவோ, ஆர்ப்பாட்டம் செய்யவோ திட்டமிட்டதாக எந்த அறிகுறியும் இல்லை என அமைச்சு கூறியது.

விசாரணை தொடர்கிறது. 

Top