Images
  • sg (1)
    (படம்: Mediacorp)

இந்தோனேசியாவிலிருந்து வந்த சிங்கப்பூரருக்குக் கிருமித்தொற்று


சிங்கப்பூரில் நேற்று மேலும் மூன்று பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.

தற்போது இங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மொத்தம் 57,904.

சமூக அளவில் பாதிக்கப்பட்டவர் 49 வயது பங்களாதேஷ் ஊழியர்.

அவருக்கு எப்படி நோய்த்தொற்று ஏற்பட்டது என்பது தெரியவில்லை.

இப்போது அவருக்கு வேலையில்லை.

சிறப்பு வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்களுக்காக நடத்தப்பட்ட வழக்கமான சோதனையின்போது அவருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டது.

தங்கும் விடுதியில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட வழக்கமான சோதனையில் ஊழியர் ஒருவருக்கு கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டது.

இந்தோனேசியாவிலிருந்து திரும்பிய சிங்கப்பூரரான 19 வயதுப் பெண்ணுக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மாது இங்கு வந்ததிலிருந்து வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வந்ததாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவருக்கு நோய்த்தொற்றுக்கான எந்த அறிகுறியும் முனபு இல்லை என்றும் அமைச்சு குறிப்பிட்டது.  

Top