Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்த 7 பேருக்குக் கிருமித்தொற்று - விவரங்கள்

வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்த 7 பேருக்குக் கிருமித்தொற்று - விவரங்கள்

வாசிப்புநேரம் -
வெளிநாட்டிலிருந்து சிங்கப்பூர் வந்த 7 பேருக்குக் கிருமித்தொற்று - விவரங்கள்

(படம்: AFP/Roslan Rahman)

சிங்கப்பூரில் நேற்று புதிதாக, 7 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.

அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்.

சமூக அளவிலோ, வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளிலோ யாரும் பாதிக்கப்படவில்லை.

புதிதாக பாதிக்கப்பட்ட 7 பேருக்கும் கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

அவர்களில் ஒருவர், பெல்ஜியத்திலிருந்து திரும்பிய சிங்கப்பூர் நிரந்தரவாசி.

எஞ்சிய 6 பேரும், தற்போது சிங்கப்பூரில் பணிபுரிவோர்.

வேலை அனுமதியின்கீழ் பணிபுரியும் ஒருவர் சுவிட்சர்லந்திலிருந்து வந்தவர். வேலை அனுமதி அட்டை கொண்ட 5 பேர், மியன்மாரிலிருந்தும் பிலிப்பீன்ஸிலிருந்தும் திரும்பியவர்கள்.

சிங்கப்பூருக்குத் வந்ததில் இருந்து அவர்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்