Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

Omicron கிருமி திட்டங்களைப் பாதித்தாலும் மலேசியாவுடன் எல்லைகளைத் திறக்கும் இலக்கில் மாற்றமில்லை: பிரதமர் லீ

சிங்கப்பூர் - மலேசியா இடையிலான தடுப்பூசிப் பயணத்தடத்தை விரிவுபடுத்தும் திட்டங்களை ஒமக்ரான் கிருமி பாதித்தாலும், மலேசியாவுடன் மேலும் எல்லைகளைத் திறக்கும் இலக்கில் மாற்றமில்லை என்று பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -
Omicron கிருமி திட்டங்களைப் பாதித்தாலும் மலேசியாவுடன் எல்லைகளைத் திறக்கும் இலக்கில் மாற்றமில்லை: பிரதமர் லீ

(படம்: CNA)

சிங்கப்பூர் - மலேசியா இடையிலான தடுப்பூசிப் பயணத்தடத்தை விரிவுபடுத்தும் திட்டங்களை ஒமக்ரான் கிருமி பாதித்தாலும், மலேசியாவுடன் மேலும் எல்லைகளைத் திறக்கும் இலக்கில் மாற்றமில்லை என்று பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாத நடுப்பகுதிக்குள், மலேசியாவுடனான தரைவழிப் பயண ஏற்பாட்டைப் பொதுப் பயணிகளுக்கும் திறந்துவிடுவதே இலக்கு என்று அவர் கூறினார்.

சிங்கப்பூர் ஒமக்ரான் கிருமியை அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவின் பினாங்கு, லங்காவி, கூச்சிங், கோத்தா கினபாலு ஆகிய இடங்களுக்கும் தடுப்பூசிப் பயணத் தடத்தை விரிவுபடுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடியதாக மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் (Ismail Sabri Yaakob) கூறினார்.

அதன் தொடர்பில் அதிகாரிகள் திட்டங்களை வகுக்கத் தொடங்குவர் என்று அவர் சொன்னார்.

தற்போது, சிங்கப்பூருக்கும், கோலாலம்பூருக்கும் இடையே மட்டும் விமானம் மூலம், தடுப்பூசிப் பயணத் தடம் நடப்பில் உள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்