Images
  • sg covid changi airport
    (கோப்புப் படம்: REUTERS/Edgar Su)

சிறப்புப் பயண ஏற்பாடு - மலேசியாவிலிருந்து 4,000 பேர் சிங்கப்பூர் வர அனுமதி

மலேசியாவிலிருந்து 4,000க்கும் அதிகமானோர் சிறப்புப் பயண ஏற்பாட்டின்வழி சிங்கப்பூருக்குள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்திக்கொள்ளத் தேவையற்ற அந்தப் பயண ஏற்பாட்டுக்கான விண்ணப்பங்கள் தொடங்கிய முதல் நாளில் அவர்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்தியாவிலிருந்தும், இந்தோனேசியாவிலிருந்தும் சிறப்புப் பயண ஏற்பாட்டின்மூலம் சிங்கப்பூர் வரத் திட்டமிடுவோருக்கான விண்ணப்பங்களும் தொடங்கியிருக்கின்றன.

இந்தியாவிலிருந்து சுமார் 1,100 பேருக்கும், இந்தோனேசியாவிலிருந்து 2,700 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில், ஒப்புதல் வழங்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களில் மலேசியா, இந்தோனேசியா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்தோரின் விண்ணப்பங்களின் விகிதம் சுமார் 12 விழுக்காடு.

தனிமைப்படுத்திக்கொள்ள தேவையற்ற சிறப்புப் பயண ஏற்பாடு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது.

கத்தார் (Qatar), சவுதி அரேபியா (Saudi Arabia), ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகியவற்றிலிருந்து சிங்கப்பூர் வருவோருக்கான விண்ணப்பங்கள் அடுத்த திங்கட்கிழமை (நவம்பர் 29) தொடங்கவிருக்கிறது.

Top