Images
  • changi airport (1)
    கோப்புப் படம்: Jeremy Long

மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்றுவிட்டு சிங்கப்பூர் வருவோருக்குப் புதிய கட்டுப்பாடுகள்

சிங்கப்பூரில், திங்கட்கிழமை (நவம்பர் 23) முதல் மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்றுவிட்டு வரும் பயணிகள் அனைவரும் அரசாங்கத்தின் நிர்ணயிக்கப்பட்ட வசதிகளில் 2 வாரம் "வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை" நிறைவேற்றவேண்டும்.

இரு நாடுகளுக்கும் கடந்த 2 வாரங்களில் பயணம் மேற்கொண்ட பயணிகளுக்கும் அது பொருந்தும்.

Reciprocal Green Lane என்னும் இருதரப்புத் தடையற்ற பயணமுறை, Periodic Commuting Arrangement என்னும் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பயண ஏற்பாடு ஆகியவற்றின்கீழ் சிங்கப்பூர் வரும் பயணிகளும் புதிய கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்படுவர்.

ஜப்பானிலிருந்து சிங்கப்பூர் வரும் பயணிகளில், வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவிலிருந்து ஏற்கனவே
விதிவிலக்கு பெற்றிருந்தவர்களும் புதிய கட்டுப்பாட்டைப் பின்பற்றவேண்டும் என்று அமைச்சு தெரிவித்தது.

சிங்கப்பூரில் வசிப்பதற்கு இடம் உள்ளவர்கள், வீட்டில் தங்கும் உத்தரவிலிருந்து விதிவிலக்கு பெறலாம் என்று அக்டோபர் மாதத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 14 நாள்களில் மலேசியாவில்
இருந்துவிட்டு, இங்கு வரும் பயணிகள் அங்கிருந்து புறப்படுவதற்கு 3 நாள் முன்னர் கிருமித்தொற்றுப் பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் அல்லாத அனைவருக்கும் அது பொருந்தும்.

கட்டுப்பாடு, இம்மாதம் 27-ஆம் தேதி நடப்புக்கு வரும்.

மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் கிருமிப்பரவல் சம்பவங்கள் மீண்டும் அதிகரிப்பதையொட்டி, புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு கூறியது. 

Top