Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

எல்லைச்சாவடிகளில் கிருமித்தொற்று அறிகுறிகள் காணப்படும் பயணிகளைத் திருப்பி அனுப்பும் நடைமுறைகள் பற்றி சிங்கப்பூரும், மலேசியாவும் கலந்தாலோசனை

எல்லைச்சாவடிகளில் கிருமித்தொற்று அறிகுறிகள் காணப்படும் பயணிகளைத் திருப்பி அனுப்பும் நடைமுறைகள் பற்றி சிங்கப்பூரும், மலேசியாவும் கலந்தாலோசனை

வாசிப்புநேரம் -

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான எல்லைச்சாவடிகளில் கிருமித்தொற்று அறிகுறிகள் காணப்படும் பயணிகளைத் திருப்பி அனுப்புவதற்கான நடைமுறைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

COVID-19 தொடர்பான இரு நாட்டுக் கூட்டுப் பணிக்குழு அதனைத் தெரிவித்தது.

எல்லைகளில் நடத்தப்படும் சுகாதாரப் பரிசோதனைகளைத் தொடர இருதரப்பும் இணங்கின.

அனுமதிக்கப்படும் அதிகபட்ச உடல் வெப்பநிலை 37.5 டிகிரி செல்சியஸாக இருக்கும்.

சுகாதாரம், போக்குவரத்து ஆகியவற்றுக்கான மூத்த துணையமைச்சர் லாம் பின் மின், மலேசிய சுகாதாரத் துணையமைச்சர் நூர் அஸ்மி கஸாலி (Noor Azmi Ghazali) ஆகியோர் தலைமையில் நேற்று காணொளி வழிச் சந்திப்பு இடம்பெற்றது.

அத்தகைய சந்திப்பு இடம்பெறுவது இது இரண்டாவது முறை. மூன்றாவது சந்திப்பு அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில் பகுதி-முடக்கம் நடப்பிலிருக்கும் வேளையில், பொருள்கள் சேவைகள் உள்ளிட்டவை நீடித்த வகையில் பாதுகாப்பாகக் கொண்டுசெல்லப்படுவதை உறுதிசெய்வதற்கான சிறப்புப் பணிக்குழுவும் சுகாதாரம் தொடர்பான விவகாரங்கள் பற்றிக் கலந்தாலோசிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்