Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர்-மலேசியா இடையிலான கடல் எல்லை தொடர்பில் ஆக்ககரமான கலந்துரையாடல்

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான கடல் எல்லைகளை வரையறுக்க நியமிக்கப்பட்ட குழு அதன் முதல் கலந்துரையாடலை ஆக்ககரமாய் நடத்தியுள்ளது. 

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்-மலேசியா இடையிலான கடல் எல்லை தொடர்பில் ஆக்ககரமான கலந்துரையாடல்

படம்: AFP

சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான கடல் எல்லைகளை வரையறுக்க நியமிக்கப்பட்ட குழு அதன் முதல் கலந்துரையாடலை ஆக்ககரமாய் நடத்தியுள்ளது.

இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் கடந்த மார்ச்சில் சந்தித்த பிறகு அமைக்கப்பட்ட அந்தக் குழு கடந்த திங்கட்கிழமை கூடியது.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் நிரந்தரச் செயலாளர் சீ வீ கியோங்கும் (Chee Wee Kiong) மலேசிய வெளியுறவு அமைச்சின் தலைமைச் செயலாளர்
மகமது ஷாருள் இக்ரம் யாக்கூப்பும் (Muhammad Shahrul Ikram Yaakob) அந்தக் கலந்துரையாடலுக்குத் தலைமை தாங்கினர்.

இருதரப்பைச் சேர்ந்த குழுக்களும் கடல் எல்லை வரையறை தொடர்பாய் ஆக்ககரமான கலந்துரையாடலை நடத்தியதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அதன் அறிக்கையில் கூறியது.

மேலும் கலந்துரையாடல்கள் நடத்துவதற்கு அது நல்ல அடித்ததளத்தை அமைத்துக் கொடுத்ததாகவும் அறிக்கை தெரிவித்தது.

அடுத்த கூட்டம் மலேசியாவில் நடைபெறும்.

சிங்கப்பூரில் உள்ள மலேசியத் தூதரகம் அதன் Facebook பக்கத்தில் கூட்டம் வெற்றிகரமாய் அமைந்ததாகப் பதிவு செய்திருந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்