Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

PCA ஏற்பாட்டின் கீழ் சிங்கப்பூருக்குள் நுழையும் மலேசியர்கள் குறைந்தது 7 நாள்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவைப் பின்பற்ற வேண்டும்

PCA என்னும் அவ்வப்போது பயணம் செய்யும் ஏற்பாட்டின் கீழ் சிங்கப்பூருக்குள் நுழையத் தகுதிபெறும் மலேசியர்கள் குறைந்தது 7 நாள்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்ற வேண்டும். 

வாசிப்புநேரம் -
PCA ஏற்பாட்டின் கீழ் சிங்கப்பூருக்குள் நுழையும் மலேசியர்கள் குறைந்தது 7 நாள்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவைப் பின்பற்ற வேண்டும்

(படம்: Reuters/Edgar Su)

PCA என்னும் அவ்வப்போது பயணம் செய்யும் ஏற்பாட்டின் கீழ் சிங்கப்பூருக்குள் நுழையத் தகுதிபெறும் மலேசியர்கள் குறைந்தது 7 நாள்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்ற வேண்டும்.

அத்துடன் அவர்கள் உடல் திரவ மாதிரிச் சோதனைக்கு உட்பட வேண்டும்.

அந்தத் தகவல்களைக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் இன்று வெளியிட்டது.

அந்தப் போக்குவரத்து ஏற்பாட்டிற்கான விண்ணப்பங்களை ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் சமர்பிக்கலாம்.

வர்த்தகம், வேலை ஆகிய காரணங்களுக்காக நீண்டகாலக் குடிநுழைவு அனுமதியை வைத்திருப்போர் PCA திட்டத்திற்கு தகுதிபெறுவார்கள்.

PCA திட்டத்தின் மூலம் இருநாட்டுக்கும் செல்வோர் சொந்த நாட்டுக்குத் திரும்பும்முன் குறைந்தது 90 நாள்கள் தங்கவேண்டும்.

பயணத்தைத் துவாஸ் அல்லது உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி வழியாக மட்டுமே மேற்கொள்ள முடியும்.

ஊழியர்களை நாட்டிற்குள் கொண்டுவர விரும்பும் நிறுவனங்கள் PCA திட்டத்தின்படி 7 நாள்கள் முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும்.

குறுகிய காலத்திற்கு நாட்டிற்குள் வந்து செல்ல RGL என்னும் பரஸ்பரப் போக்குவரத்து முறையும் உள்ளது.

அதன் மூலம் 14 நாள்கள் தங்கலாம்.

RGL திட்டத்திற்குப் பொதுவாக அரசாங்க அதிகாரிகள், சிங்கப்பூரைத் தளமாகக் கொண்டு செயல்படும் நிறுவனங்களின் ஊழியர்கள் முதலானோர் தகுதிபெறுவர்.

மேல்விவரங்களைக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்