Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

தண்ணீர் விலையை மறுபரிசீலனை செய்யும் உரிமை - சிங்கப்பூரும் மலேசியாவும் தொடர்ந்து பேச்சு நடத்தும்

சிங்கப்பூரும் மலேசியாவும் தண்ணீர் விலையை மறுபரிசீலனை செய்யும் உரிமை குறித்த ஒன்று மற்றதன் நிலையை மேலும் புரிந்து கொள்ளத் தொடர்ந்து கலந்துரையாடப் போவதாகத் தெரிவித்துள்ளன.

வாசிப்புநேரம் -
தண்ணீர் விலையை மறுபரிசீலனை செய்யும் உரிமை - சிங்கப்பூரும் மலேசியாவும் தொடர்ந்து பேச்சு நடத்தும்

படம்: REUTERS

சிங்கப்பூரும் மலேசியாவும் தண்ணீர் விலையை மறுபரிசீலனை செய்யும் உரிமை குறித்த ஒன்று மற்றதன் நிலையை மேலும் புரிந்து கொள்ளத் தொடர்ந்து கலந்துரையாடப் போவதாகத் தெரிவித்துள்ளன.

கடல்துறை சர்ச்சையைத் தணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து இன்று (மார்ச் 14) பேச்சு நடத்திய போது இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள் அந்தத் தகவலை வெளியிட்டனர்.

தண்ணீர் விலையை மறுபரிசீலனை செய்வதைக் குறித்து மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் வெவ்வேறு கண்ணோட்டம் இருப்பதால், அதைப் பற்றி மேலும் புரிந்துகொள்ள வேண்டிய அவசியத்தை வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

இருநாட்டுத் தலைமைச் சட்ட அதிகாரிகள், சுமுகமான தீர்வைக் காணும் நோக்கில் பேச்சு நடத்துவர் என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதீன் அப்துல்லா (Saifuddin Abdullah) கூறினார்.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்