Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'SG Nasi Lemak' ஆபாச உரையாடல் குழுவை நிர்வாகம் செய்தவர் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு

Telegram செயலி வழி ஆபாசக் காணொளிகள், உரையாடல்கள் ஆகியவற்றைப் பரிமாறிக்கொண்ட குழுவை நிர்வாகம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
'SG Nasi Lemak' ஆபாச உரையாடல் குழுவை நிர்வாகம் செய்தவர் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு

(படம்: Facebook/Leonard Teo Min Xuan)


Telegram செயலி வழி ஆபாசக் காணொளிகள், உரையாடல்கள் ஆகியவற்றைப் பரிமாறிக்கொண்ட குழுவை நிர்வாகம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் மீது மேலும் ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

26 வயது லியனர்ட் தியோ மின் சுவான் (Leonard Teo Min Xuan) வின் வீட்டிலிருந்த மின்னியல் சாதனங்களில் ஆபாசப் படங்கள், காணொளிகள் இருந்ததாக இன்று (அக்டோபர் 22) குற்றஞ்சாட்டப்பட்டது.

'SG Nasi Lemak' எனும் Telegram உரையாடல் குழு வழி, ஆபாசக் காணொளிகள், படங்கள், உரையாடல்களை அனுப்பியதாக கடந்த வாரம் தியோ மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இவ்வாண்டு மார்ச் மாதத்திற்கும் அக்டோபர் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் அந்தக் குழு பற்றி காவல்துறையிடம் பல்வேறு புகார்கள் பதிவுசெய்யப்பட்டதன் அடிப்படையில் தியோவும் மேலும் மூவரும் கைதுசெய்யப்பட்டனர்.

தியோ அடுத்த மாதம் 5 ஆம் தேதி விசாரணைக்காக நீதிமன்றத்துக்குத் திரும்புவார்.

ஆபாசப் படங்கள், காணொளிகள் போன்றவற்றைக் கொண்டிருந்தாலோ பரிமாறிக்கொண்டாலோ, அதற்கு அதிகபட்சமாக மூன்று மாதச் சிறைத்தண்டனையோ, அபராதமோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்