Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

COVID-19: சிங்கப்பூரில் புதிதாக 158 பேருக்குக் கிருமித்தொற்று; சமூக அளவில் 9 பேருக்குப் பாதிப்பு

சிங்கப்பூரில் இன்று புதிதாக 158 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
COVID-19: சிங்கப்பூரில் புதிதாக 158 பேருக்குக் கிருமித்தொற்று; சமூக அளவில் 9 பேருக்குப் பாதிப்பு

(கோப்புப்படம்: Tiffany Ang)

சிங்கப்பூரில் இன்று புதிதாக 158 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களையும் சேர்த்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 45, 298 ஆனது.

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள்.

சமூக அளவில் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் நால்வர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தவாசிகள் என்றும், ஐவர் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கும் மேலும் மூவருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் வந்ததிலிருந்தே அவர்கள்
வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றிவருகின்றனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்