Images
  • sg covid (13)
    (படம்: Try Sutrisno Foo)

சிங்கப்பூரில் இன்று புதிதாக 7 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி

சிங்கப்பூரில் இன்று புதிதாக 7 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவர்களையும் சேர்த்து இங்கு பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 57,911 ஆனது.

புதிதாகப் பாதிக்கப்பட்டோரில் ஒருவர் தங்கும் விடுதியைச் சேர்ந்த வெளிநாட்டு ஊழியர்.

சமூக அளவில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டிலிருந்து வந்த 5 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம்காணப்பட்டது.

சிங்கப்பூருக்குத் திரும்பியதிலிருந்து அவர்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றி வருவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. 

Top