Images
  • sg nz (1)

சிங்கப்பூர்-நியூசிலந்து இருதரப்பு உறவை வலுப்படுத்தும் ஒப்பந்தம் கையெழுத்து

சிங்கப்பூரும் நியூசிலந்தும் உறவுகளை வலுப்படுத்துவதற்கான பங்காளித்துவ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் ஒப்பந்தம் வகைசெய்யும்.

வர்த்தகம், தற்காப்பு, அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம் ஆகிய துறைகளில் இனி கூடுதல் ஒத்துழைப்பு இடம்பெறும்.


பிரதமர் லீ சியென் லூங்கும் சிங்கப்பூருக்கு முதல்முறையாக அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள நியூசிலந்துப் பிரதமர் ஜெசிண்டா ஆர்டனும் அதில் கையெழுத்திட்டனர்.

இஸ்தானாவில் கூட்டுப் பிரகடனத்தின் மூலம் சிங்கப்பூர் - நியூசிலந்து மேம்பட்ட பங்காளித்துவம் உறுதிசெய்யப்பட்டது.

பங்காளித்துவ ஒப்பந்தத்தின் கீழ், ஐந்து உடன்பாடுகளும் இணக்கக் குறிப்புகளும் கையெழுத்தாயின.

ஈராண்டுக்கு முன் முதலில் அறிவிக்கப்பட்ட அவை ஐந்து சுற்றுப் பேச்சுக்குப் பிறகு தயாரித்து முடிக்கப்பட்டன.

நீண்ட காலமாக உள்ள தடையற்ற வர்த்தக உடன்பாட்டை மேம்படுத்தியதன் மூலம் இருநாடுகளும் அவற்றின் வர்த்தக உறவை வலுப்படுத்திக்கொண்டன.

 

Top