Images
  • Singapore

வெளிநாட்டு அரசாங்கங்களைக் கண்டித்து சிங்கப்பூரில் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படாது : காவல்துறை

சிங்கப்பூரில் வெளிநாட்டு அரசாங்கங்களை எதிர்த்துப் பேரணி நடத்த அனுமதி வழங்கப்படாது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

ஹாங்காங்கில் தற்போது நடந்துவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக சிங்கப்பூரில் பேரணி நடத்தப்படுகிறதா என்பது பற்றித் தொலைபேசி அழைப்புகள் வந்ததைத் தொடர்ந்து காவல்துறை அந்த அறிக்கையை வெளியிட்டது.

சிங்கப்பூரில் இருக்கும் வெளிநாட்டினரும், சுற்றுப் பயணிகளும் சிங்கப்பூரின் சட்டங்களை மதித்து நடக்க வேண்டும் என்றும் அது கூறியது.

சட்டத்தை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், அவர்களுடைய விசா ரத்து செய்யப்படும் என்றும் காவல்துறை தெரிவித்தது.

பேச்சாளர் சதுக்கத்தில் சிங்கப்பூரர்களும், நிரந்தரவாசிகளும் மட்டும் தான் கூட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அது நினைவூட்டியது.


 

Top