Images
  • sg covid (12)
     (கோப்புப் படம்: AFP/Roslan Rahman)

நவம்பர் 6 முதல் சீனா, ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம் ஆகியவற்றிலிருந்து பயணிகள் சிங்கப்பூர் வரலாம்

சீனத் தலைநிலத்திலிருந்தும் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலிருந்தும் வருவோர் அடுத்த மாதம் 6ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூருக்குள் அனுமதிக்கப்படுவர்.

அங்கிருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படவிருக்கின்றன.

அடுத்த மாதம் 5ஆம் தேதி நள்ளிரவுக்குப் பின் புதிய நடைமுறை நடப்புக்கு வரும்.

சிங்கப்பூர்க் குடியுரிமையோ, நிரந்தரவாசத் தகுதியோ, நீண்டகால வருகை அனுமதியோ இல்லாதோருக்கும் அது பொருந்தும் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.

இம்மாதம் 30ஆம் தேதி முதல், பயணிகள் அதற்கான விமானப் போக்குவரத்து அனுமதிக்கு விண்ணப்பிக்கவேண்டும்.

சிங்கப்பூருக்கு வருவதற்கு 14 நாள்கள் முன்புவரை அவர்கள் தலைநிலச் சீனாவிலோ, ஆஸ்திரேலியாவிலோ தங்கியிருந்திருக்க வேண்டும். நேரடி விமானங்கள் மூலம் வரும் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

சிங்கப்பூர் வந்ததும் விமான நிலையத்தில் கிருமித்தொற்றுச் சோதனைக்கு அவர்கள் உட்படுத்தப்படுவர். சோதனையில் கிருமி தொற்றவில்லை என்பது உறுதியானால், அவர்கள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை நிறைவேற்றத் தேவையில்லை. 

Top