Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் இந்தோனேசியாவுக்குத் தொடர்ந்து அவசரகால உயிர்வாயுவை அனுப்பிவைக்கும்

சிங்கப்பூர் இந்தோனேசியாவுக்குத் தொடர்ந்து அவசரகால உயிர்வாயுவை அனுப்பிவைக்கும்

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் இந்தோனேசியாவுக்குத் தொடர்ந்து அவசரகால உயிர்வாயுவை அனுப்பிவைக்கும்

படம்: Smart-Gas

சிங்கப்பூர் இந்தோனேசியாவுக்கு அவசரகால உயிர்வாயுவைத் தொடர்ந்து அனுப்பிவைக்கும் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

COVID-19 நோய்த்தொற்றால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள இந்தோனேசியாவுக்கு 'Oxygen Shuttle' என்னும் திட்டத்தின்கீழ் சிங்கப்பூர் உதவிவருகிறது.

இந்தோனேசியாவின் கோரிக்கைக்கு ஏற்ப ஆகஸ்ட் மாதத்திற்குள் 500 டன்னுக்கும் அதிகமான அவசரகால உயிர்வாயுவை சிங்கப்பூர் அனுப்பும் என்று வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

4 ISO கலன்களில் 80 டன் திரவ உயிர்வாயு ஜக்கர்த்தாவை இன்று சென்றடைந்தது.

உயிர்வாயு வாரம் ஒருமுறை பெரிய அளவில் இந்தோனேசியாவைச் சென்றடையும் என்று மூத்த அமைச்சர் தியோ சீ ஹியன் கூறினார்.

80 டன் திரவ உயிர்வாயு மூலம் சுமார் 10,000 உயிர்வாயுக் கலன்களை நிரப்பலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்