Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பான இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது

சிங்கப்பூரில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பான இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர்
நாடாளுமன்றத்தில் இன்று முதன்முறையாக உறுப்பினர்களுக்கிடையே பாதுகாப்பான இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது.

உறுப்பினர்கள் உரிய இடைவெளிவிட்டு இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.

நாடாளுமன்றக் கட்டடத்தின் மற்ற மாடிகளிலும் அந்த நடைமுறை பின்பற்றப்பட்டது.

கிருமிப்பரவலால் நாட்டில் வழக்கநிலை பாதிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின் கூறினார்.

கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ளவது அவசியம் என்றார் அவர்.

SARS, H1N1 பாதிப்புகள் நிலவியபோதும் சிங்கப்பூர் ஒன்றிணைந்து செயல்பட்டது. அதேபோல், மக்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் பங்காற்றி, COVID-19 கிருமிப்பரவலைக் கடக்கமுடியும் என்று திரு. டான் குறிப்பிட்டார்.


எளிதில் பாதிக்கப்படக்கூடியோரைக் கண்டறிந்து, ஒருவருக்கொருவர் ஆதரவும், ஊக்கமும் தரவேண்டும்.
குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் ஆகியோரின் பாதுகாப்புக்காக அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று திரு. டான் வலியுறுத்தினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்