Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அண்மையில் நோய்த்தொற்று உறுதியானோர் முஸ்தஃபா சென்டர், மரினா பே சாண்ட்ஸ் கடைத்தொகுதி உள்ளிட்ட இடங்களுக்கு முன்னர் சென்றிருந்தனர்

சிங்கப்பூரில் அண்மையில் கிருமித்தொற்று உறுதியானோர், முன்னர் சென்றுவந்த பொது இடங்கள் குறித்துச் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
அண்மையில் நோய்த்தொற்று உறுதியானோர் முஸ்தஃபா சென்டர், மரினா பே சாண்ட்ஸ் கடைத்தொகுதி உள்ளிட்ட இடங்களுக்கு முன்னர் சென்றிருந்தனர்

கோப்புப்படம்: Try Sutrisno Foo

சிங்கப்பூரில் அண்மையில் கிருமித்தொற்று உறுதியானோர், முன்னர் சென்றுவந்த பொது இடங்கள் குறித்துச் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

ஃபேரர் பார்க் பகுதியில் இருக்கும் முஸ்தஃபா சென்டர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

மரினா பே சாண்ட்ஸ் கடைத்தொகுதியில் அமைந்துள்ள Rasapura Masters உணவங்காடி நிலையத்திற்கு இரு வெவ்வேறு நாள்களில் நோய்வாய்ப்பட்டவர்கள் சென்றிருந்தனர்.

பூன் லேயில் உள்ள STA வாகனச் சோதனை நிலையத்திற்கும் நோய்வாய்ப்பட்டவர் இம்மாதம் 24ஆம் தேதி சென்றிருந்தார்.

பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோருக்குத் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்த இடங்களுக்குச் சென்றிருந்தோர் அடுத்த 14 நாள்களுக்குத் தங்கள் உடல்நிலையை அணுக்கமாகக் கண்காணிக்கும்படி ஆலோசனை கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இடங்களில் துப்புரவு, கிருமிநீக்கப் பணிகளை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட நிர்வாகங்களுக்குத் தேசியச் சுற்றுப்புற அமைப்பு வழிகாட்டும்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்