Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு ஆதரவளித்து, நம்பிக்கையூட்டுவது அவசியம்'

கிருமித்தொற்றுச் சூழலில், குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு ஆதரவளித்து, நம்பிக்கையூட்டுவது அவசியம் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் (Halimah Yacob) கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -

கிருமித்தொற்றுச் சூழலில், குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு ஆதரவளித்து, நம்பிக்கையூட்டுவது அவசியம் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் (Halimah Yacob) கூறியுள்ளார்.

கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களே என்பதை அவர் சுட்டினார்.

Fei Yue குடும்பச் சேவை நிலையத்திற்குச் சென்றிருந்த திருவாட்டி ஹலிமா, அடுத்த ஆண்டின் அதிபர் சவால் அறநிதிக்கான கருப்பொருளை அறிவித்தார்.

"குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களை ஆதரித்தல்" எனும் கருப்பொருளில் அது நடைபெறும்.

நோய்ப்பரவல் சூழலிலிருந்து வசதி குறைந்த குடும்பங்கள் வலுவாக மீண்டுவர அது உதவும்.

இலக்குகளை அடைய அவர்களுக்கு நியாயமான வாய்ப்புகளை வழங்குவதும் அதன் நோக்கமாக இருக்கும்.

மேலும் சிறந்த வேலை வாய்ப்புகளைப் பெற, திறன் மேம்பாட்டுக்கு உதவி வழங்குவதன் மூலம், அது சாத்தியமாகும் என்று அதிபர் தெரிவித்தார்.

அதிக அனுகூலங்கள் இல்லாத பின்னணியைச் சேர்ந்த குழுந்தைகள், நோய்ப்பரவல் சூழலில் கடுமையாக பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது முக்கியம் என்றும் அவர் கூறினார்.

வளங்கள் அவர்களை எளிதில் சென்று சேர்வதை உறுதிசெய்வதும் உதவியாக இருக்கும் என்று திருவாட்டி ஹலிமா சொன்னார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்