Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

நீடித்த, நிலையான சொத்துச் சந்தை தொடர்பான கொள்கைகளில், தேவைப்பட்டால் மாற்றங்கள் செய்யப்படும் - அமைச்சர் டெஸ்மண்ட் லீ

நிலையான, நீடித்த சொத்துச் சந்தை மக்களுக்குத் தொடர்ந்து கிடைக்க, அது தொடர்பான கொள்கைகளில் தேவையான மாற்றங்களைச் செய்யத் தயார் என, தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ (Desmond Lee) தெரிவித்துள்ளார்.

வாசிப்புநேரம் -

நிலையான, நீடித்த சொத்துச் சந்தை மக்களுக்குத் தொடர்ந்து கிடைக்க, அது தொடர்பான கொள்கைகளில் தேவையான மாற்றங்களைச் செய்யத் தயார் என, தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ (Desmond Lee) தெரிவித்துள்ளார்.

தற்போது உலகப் பொருளியலில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழலால், சொத்துச் சந்தை பாதிக்கப்படும் சாத்தியத்தை நிராகரிப்பதற்கு இல்லை என அவர் எச்சரித்தார்.

உள்ளூர் வேலைச் சந்தை நிலவரத்தாலும் சிங்கப்பூரின் சொத்துச் சந்தை பாதிக்கப்படலாம் என்றார் திரு. லீ.

வீடுகளை வாங்குவோர், தங்களால் கடனைத் திரும்பச் செலுத்த முடியுமா என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார். வட்டி விகிதம், உயரும் சாத்தியத்தை அவர் சுட்டினார்.

நிலத்துக்கான ஏலக் குத்தகையின்போது விவேகமாகச் செயல்படும்படித் திரு. லீ குத்தகையாளர்களைக் கேட்டுக்கொண்டார்.

அதேவேளை, தங்கள் புதிய கட்டுமானத் திட்டங்களைப் பொறுப்புடன் விளம்பரம் செய்யும்படியும் அவர் அறிவுறுத்தினார்.

வீடுகளை வாங்குவோர், தங்கள் தேவைக்கேற்ற, கட்டுப்படியான முடிவுகளை எடுக்க அவை உதவும் என, தேசிய வளர்ச்சி அமைச்சர் குறிப்பிட்டார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்