Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் பங்குச் சந்தையின் விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது இன்னும் விரைவான ஒழுங்கு நடவடிக்கை

சிங்கப்பூர் பங்குச் சந்தையின் விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது இன்னும் விரைவாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம். 

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர் பங்குச் சந்தையின் விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது இன்னும் விரைவான ஒழுங்கு நடவடிக்கை

படம்: Reuters/Edgar Su

சிங்கப்பூர் பங்குச் சந்தையின் விதிகளை மீறும் நிறுவனங்கள் மீது இன்னும் விரைவாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம்.

பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டுப் பிரிவு பரிந்துரைத்துள்ள மாற்றங்கள் மூலம் அது சாத்தியமாகும்.

நிறுவனங்களில் நடக்கும் தவறுகளை அம்பலப்படுத்தும் அதிகாரிகளை அவை எவ்வாறு பாதுகாக்கின்றன; குற்றச்சாட்டுகள் எந்த முறையில் விசாரிக்கப்படுகின்றன என்பது பற்றிய தகவலை வெளியிடுவது கட்டாயமாக்கப்படும்.

பரிந்துரைக்கப்பட்டுள்ள புதிய விதியின் கீழ், பொதுக் கண்டனத்தை வெளியிடுவது உட்பட பொதுத் தடைகளை விதிக்க சிங்கப்பூர் பங்குச் சந்தைக்கு அதிகாரம் வழங்கப்படும்.

விசாரணைக்கு உட்பட்டிருக்கும் நிறுவனங்கள், இயக்குநர்களை நியமனம் அல்லது மறுநியமனம் செய்வதற்கு முன்னர், பங்குச் சந்தைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அனுமதியைப் பெற வேண்டும்.

தற்போது அந்த அதிகாரம் சட்ட, ஒழுங்குக் குழுவிடம் உள்ளது.

கடுமையான சம்பவங்களில் அபராதத் தொகையை நிர்ணயிக்கும் அதிகாரம், தொடர்ந்து அந்தக் குழுவிடமே இருக்கும்.

பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் பற்றி, இப்போதிருந்து செப்டம்பர் 7 ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்