Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

செயற்கைத் திடலுக்கு மாறிவரும் பள்ளிகள்

செயற்கைத் திடலுக்கு மாறிவரும் பள்ளிகள்

வாசிப்புநேரம் -

கல்வியமைச்சு பள்ளி வளாகங்களில் உள்ள மைதானங்களை செயற்கைத் திடல்களாக மாற்றி வருகிறது.

அதற்காக 83.5 மில்லியன் வெள்ளியை அது ஒதுக்கியுள்ளது. அதில் 42 மில்லியன் வெள்ளி செலவு செய்யப்பட்டுள்ளது.

மைதானம் செயற்கைத் திடலாக மாறினால் அது நீண்டகாலப் பயன்பாட்டுக்கு உதவும்.

குறைந்த பராமரிப்பே தேவைப்படும், தூய்மையான இடமாக மாற்றம் காணும் என்று கல்வியமைச்சு தெரிவித்தது.

மழை பெய்யும் பொழுது செயற்கைத் திடல்களில் சேறு உருவாகாது, அது மாணவர்களை விளையாட ஊக்குவிக்கும்.

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் கிட்டத்தட்ட 142 பள்ளிகள் கல்வியமைச்சின் உதவியால் மைதானங்களை செயற்கைத் திடலாக மாற்றியமைத்தன.

ஒரு செயற்கைத் திடலை அமைக்க கிட்டத்தட்ட 200,000 முதல் 500,000 வெள்ளி வரை செலவாகும் என்றும், அடுத்த ஆண்டுக்குள் மேலும் 10 பள்ளிகளில் செயற்கைத் திடலை அமைக்கவிருப்பதாகவும் கல்வியமைச்சு தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்