Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூருக்கு மேலும் Sinopharm தடுப்புமருந்து வந்துசேர்ந்தது

சிங்கப்பூருக்கு மேலும் Sinopharm தடுப்புமருந்து வந்துசேர்ந்தது

வாசிப்புநேரம் -

Clearbridge Health குழுமத்தின் இரண்டாம் தொகுதி Sinopharm தடுப்புமருந்து சிங்கப்பூருக்கு வந்துசேர்ந்துள்ளது.

குழுமத்தின் Medic Surgical & Laser மருந்தகத்தில் தடுப்புமருந்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

தடுப்புமருந்தில் ஒரு பகுதி Royal Healthcare Specialists மருத்துவ நிலையத்திற்கு வழங்கப்படும்.

சென்ற மாதம் 28ஆம் தேதி, அதன் முதல் தொகுதித் தடுப்புமருந்து சிங்கப்பூரை வந்தடைந்தது.

ஒரு சில நாள்களுக்குள் தடுப்புமருந்தைப் போட்டுக்கொள்வதற்கான முன்பதிவுகள் நிரம்பிவிட்டன.

Sinopharm தடுப்புமருந்தை மேலும் தருவிப்பது குறித்து ஏனைய மருத்துவக் குழுமங்களும், மருந்தகங்களும் பரிசீலித்து வருகின்றன.

Raffles மருத்துவக் குழுமம் 10,000 முறை போடக்கூடிய இரண்டாம் தொகுதித் தடுப்புமருந்தைத் தற்போது விநியோகித்து வருகிறது.

தேவை அடிப்படையில் மூன்றாம் தொகுதியைத் தருவிப்பது குறித்து முடிவெடுக்கப்படுமென அது கூறியது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்