Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சீனாவில் கொரோனா கிருமித் தொற்றால் போக்குவரத்துத் தடை.....பாதிக்கப்பட்டிருக்கும் சிங்கப்பூரின் சிறிய, நடுத்தர நிறுவனங்கள்

சீனாவில் நொவல் கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடை சிங்கப்பூரில் உள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

வாசிப்புநேரம் -

சீனாவில் நொவல் கொரோனா கிருமித்தொற்றால் ஏற்பட்டுள்ள போக்குவரத்துத் தடை சிங்கப்பூரில் உள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

அது குறித்து 'செய்தி' சில சிறிய, நடுத்தர நிறுவனங்களிடம் கேட்டறிந்தது.

சீனாவிலிருந்து சுமார் 70 விழுக்காட்டுப் பொருள்களைத் தருவிக்கிறது Pisti Prints நிறுவனம்.

டீ-சட்டைகள் போன்ற பொருள்களைத் தனித்தன்மையுடன் செய்யும் நிறுவனம் பெரிதாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறினார் நிறுவனத்தின் யமுனா.

பொருள்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப சிறப்பாகச் செய்யப்படுவதால் நாங்கள் கையிருப்பு எதனையும் வைத்திருப்பதில்லை. அதனால் நாம் பெரிதாகப் பாதிக்கப்பட்டுள்ளோம்.

ஏற்பாட்டு நிகழ்ச்சிகள் பல ரத்து செய்யப்பட்டுள்ளதாலும் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

வியாபாரச் செலவுகளைக் குறைத்துக்கொள்ள முயல்கிறோம். மற்ற விநியோகஸ்தர்களிடம் பணம் செலுத்தவும் வாடகையைக் கட்டவும் கூடுதல் கால அவகாசம் கேட்டுள்ளோம்

பைகளையும் பரிசுப் பொருள்களையும் மொத்த விற்பனை செய்யும் JoSa Imaging நிறுவனம், தற்போது உள்ள இருப்புடன் சுமார் 3 மாதங்கள் தாக்குப்பிடிக்கமுடியும் என்றது. இருப்பினும் சிரமத்தை எதிர்நோக்குவதாகச் சொன்னார்,நிறுவனத்தின் உரிமையாளர் ஜோ.

இருப்பில் உள்ள பொருள்கள் முடிந்தால் மலேசியா அல்லது இந்தியாவிலிருந்து பொருள்களைத் தருவிக்கவேண்டும். சீனாவில் பல தயாரிப்பு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்துவருகிறோம்

 Ameen Enterprises நிறுவனத்தின் ஜுனேஸா, தற்போது உள்ளூர் விநியோகஸ்தர்களிமிருந்து பொருள் வாங்குவதாகக் கூறினார். அவர்கள் பாதிக்கப்பட்டால் அதன் தாக்கம் தங்களுக்கும் இருக்கும் என்றார் அவர்.

எங்கள் பொருள்களை அதிகக் காலம் இருப்பில் வைத்திருக்க முடியாது...அவற்றைக் குறிப்பிட்ட காலக்கட்டத்தில் விற்கவில்லை என்றால் பெரிய இழப்பு ஏற்படும்

சில சேவைகளை நாடி வரும் வாடிக்கையாளர்களுக்கு "முடியாது" என்று கூறி மறுக்க வேண்டியுள்ளது

அவ்வாறு தெரிவித்தார் சீனாவிலிருந்து சுமார் 70 விழுக்காட்டு சரக்குகளைத் தருவிக்கும் பரிசுக் கோப்பை நிறுவனம் Alpha Plus Trophies நிறுவனத்தின் நிர்வாகி திரு. யோ.

நிலைமையைக் கண்காணிக்கிறோம்...தேவை ஏற்பட்டால் ஊழியர்களை விடுப்பு எடுத்துக்கொள்ளச் சொல்வோம். வேறு வழியில்லை.

ஏற்பாடு நிகழ்ச்சிகளுக்குக் கூடாரங்கள் அமைக்கும் LHL நிறுவனத்தின் ஜோன், நிகழ்ச்சிகள் பல ஒத்திவைக்கபட்டதால் தற்போது ஒரு மாத விடுப்பில் உள்ள ஊழியர்களைத் தங்கள் விடுப்பை நீட்டிக்குமாறு கேட்க நேரிடும் என்றார்.

நிலைமை சீராகும்வரை, சம்பளம் வாடகை, விநியோகம், பராமரிப்பு அனைத்தும் சிரமமாகவே இருக்கப்போவதாய் சிறு தொழில் செய்யும் பலர் 'செய்தி'-இடம் கூறினர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்