Images
  • sg covid (23)
    (கோப்புப் படம்: AFP/Roslan Rahman)

பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கை மீறல் : 14 இடங்களுக்கும் 74 தனிநபர்களுக்கும் தண்டனை

சிங்கப்பூரில் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை மீறியதற்காக 14 இடங்களுக்கும் 74 தனிநபர்களுக்கும் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு அது குறித்த தகவலை வெளியிட்டது.

மூட உத்தரவிடப்பட்ட இடங்கள்

  • Club Peaches
  • Alive @ SG Pub
  • Tangmen உணவகம்
  • Club Empire

Club Peaches உணவகத்தில் இருந்த 9 பேருக்கு முறையே 300 வெள்ளி அபராதமும் விதிக்கப்பட்டது.

பாதுகாப்பு விதிகளை மீறியதற்காக மேலும் 8 உணவு பானக் கடைகளுக்கு முறையே 1,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

இரண்டு உணவு பானக் கடைகள் மீண்டும் விதிகளை மீறியதால், அவற்றுக்கு முறையே 2,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

தேக்கா நிலையத்தில் இருந்தபோது, அமலாக்க அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி, முகக் கவசம் அணியத் தவறிய இருவருக்கு முறையே 300 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த மாதத்தின் முதல் இரண்டு நாள்களில், பூங்காக்களிலும் கடற்கரைகளிலும் பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை மீறிய 63 பேருக்குத், தேசியப் பூங்காக் கழகம் அபராதம் விதித்தது.  

Top