Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் நேற்று சமூக அளவில் பாதிக்கப்பட்டவர் மியன்மாரைச் சேர்ந்த இல்லப் பணிப்பெண்

சிங்கப்பூரில் நேற்று சமூக அளவில் ஒருவருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் நேற்று சமூக அளவில் ஒருவருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

பாதிக்கப்பட்டவர் மியன்மாரைச் சேர்ந்த 40 வயது இல்லப் பணிப்பெண் எனச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவர் கடந்த நவம்பர் 13ஆம் தேதி சிங்கப்பூருக்கு வந்தார்.

வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவின்போது அவருக்குக் கிருமித்தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்குக் கிருமித்தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இம்மாதம் 2ஆம் தேதி அவருக்குத் தலைவலியும், இரண்டு தினங்களுக்குப் பிறகு மூச்சுத் திணறலும் ஏற்பட்டன.

மருத்துவப் பரிசோதனையில் அவருக்குக் கிருமித்தொற்று உறுதியானது.

இம்மாதம் ஐந்தாம் தேதி, தேசியப் பொதுச் சுகாதார ஆய்வகம் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்குக் கிருமித்தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் பரிசோதனையின் மூலம் அவருக்கு இதற்கு முன்னதாகக் கிருமித்தொற்று இருந்ததாகக் கண்டறியப்பட்டது.

அவர் எப்போது பாதிக்கப்பட்டார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்பதால், அவர் சமூக அளவில் பாதிக்கப்பட்டவர் என வகைப்படுத்தப்படுவதாய் சுகாதார அமைச்சு தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்