Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரர்கள் சிறந்த பலன்கள் அடைய மொத்த ஊழியரணி திறம்படப் பயன்படுத்தப்படுகிறது

சிங்கப்பூரும் சிங்கப்பூர்களும் சிறந்த பலன்களைப் பெறும் வகையில் நாடு அதன் ஒட்டுமொத்த ஊழியர் அணியைத் திறம்படப் பயன்படுத்திக் கொள்வதாக நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார். 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரும் சிங்கப்பூர்களும் சிறந்த பலன்களைப் பெறும் வகையில் நாடு அதன் ஒட்டுமொத்த ஊழியர் அணியைத் திறம்படப் பயன்படுத்திக் கொள்வதாக நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரர்களின் வேலைப் பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் அவர் பேசினார்.

ஊழியரணியில் வெளிநாட்டு - உள்நாட்டு ஊழியர் விகிதத்தைத் தொடர்ந்து சரிசெய்து, அரசாங்கம், சிங்கப்பூருக்கென சிறந்த திறனாளர்களை ஒன்றுதிரட்டுவதாகவும் திரு. வோங் கூறினார்.

வருமான அளவின் கீழ்நிலையில், வேலை அனுமதிச் சீட்டு, சிறப்பு வேலை அனுமதி ஆகியவற்றை வைத்திருப்போரின் எண்ணிக்கையை ஒதுக்கீடு, தீர்வை ஆகிய அம்சங்கள் நிர்ணயிக்கின்றன.

நடுத்தர, உயர் வருமானப் பிரிவுகளில் ஊழியர்களுக்குச் சரியான திறன்கள் இருப்பதை உறுதிசெய்ய குறைந்தபட்சத் தகுதிநிலைச் சம்பளங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

நிறுவனங்கள் பல்வேறு நிலைகளில் தேவைப்படும் ஊழியர்களைப் பணியில் அமர்த்த அந்தக் கட்டமைப்பு உதவுவதாகத் திரு. வோங் கூறினார்.

CECA எனும் விரிவான பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடு அல்லது இந்திய நிபுணத்துவத் தொழிலர்கள் பற்றிய பிரச்சினையாக அதனை மாற்றக்கூடாது என்று அமைச்சர் வோங் கேட்டுக்கொண்டார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்