Images

சிங்கப்பூர்த் தமிழ் இசை மின் தொகுப்பு இன்று அதிகாரபூர்வத் தொடக்கம்

சிங்கப்பூர் இந்திய மரபுடைமையைக் கட்டிக்காக்க வேண்டும்; அது காலத்தால் அழிந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அந்த நோக்கில், சிங்கப்பூர்த் தமிழ் இசை மின் தொகுப்பு இன்று அதிகாரபூர்வமாக தொடங்கிவைக்கப்பட்டது.

தேசிய நூலக வாரியமும் தமிழ் மின் மரபுடைமைக் குழுவும் இணைந்து அந்தத் தொகுப்பை அறிமுகம் செய்துள்ளன.

ஒலி, ஒளி பதிவுகள், நிகழ்ச்சி நிரல்கள் என இசை தொடர்பான 800க்கும் அதிகமான ஆவணங்கள் ஓராண்டு காலமாக சேகரிக்கப்பட்டன.

சிங்கப்பூரில் தமிழ் மொழி, கலாசாரத்தைக் கட்டிக்காத்து, வளர்க்க மின் மரபுடைமைக் குழு நூலக வாரியத்துடன் இணைந்து மேற்கொண்டிருக்கும் திட்டங்களில் இதுவும் ஒன்று.

Top