Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

பொருள் சேவை வரிக்குப் பதிவு செய்யாமல் இணையம்வழியே பொருள்களை விற்றவர் மீது குற்றச்சாட்டு

பொருள் சேவை வரிக்குப் பதிவு செய்யாமல் இணையம்வழியே பொருள்களை விற்றவர் மீது குற்றச்சாட்டு

வாசிப்புநேரம் -
பொருள் சேவை வரிக்குப் பதிவு செய்யாமல் இணையம்வழியே பொருள்களை விற்றவர் மீது குற்றச்சாட்டு

(கோப்புப் படம்: Jeremy Long)

சிங்கப்பூரில், பொருள் சேவை வரிக்குப் பதிவு செய்யாமல், இணையம்வழியே பொருள்களை விற்றதன் தொடர்பில் எட்வின் பாங் எனும் 40 வயது முன்னாள் தொழிலதிபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவுள்ளது.

அந்தக் காரணத்துக்காக சிங்கப்பூரில் ஒருவர் குற்றஞ்சாட்டப்படுவது இதுவே முதன்முறை.

தகுந்த காரணம் இன்றி தவறான வருமான வரி விண்ணப்பம் சமர்ப்பித்தது, முறையான ஆவணங்களை வைத்திருக்காதது ஆகியவற்றின் தொடர்பிலும் Edwin மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அவர் செலுத்தாத வரியின் மதிப்பு சுமார் 130,000 வெள்ளி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

2015 லிருந்து 2019 வரை இணைய வர்த்தகத்தின் மூலம் மீட்கப்பட்ட வரி, அபராதம் ஆகியவற்றின் மதிப்பு 3.8 மில்லியன் வெள்ளிக்கும் அதிகம் என்று உள்நாட்டு வருவாய் ஆணையம் குறிப்பிட்டது.

வரிக் கழிவுக்கு உட்படாத வர்த்தகச் செலவினத்துக்கு வரிச் சலுகை கோருவதும் குற்றமாகக் கருதப்பட்டது.

அவ்வாறு குற்றம் செய்வோருக்கு, செலுத்தத் தவறிய வரியைப் போல் 4 மடங்கு வரை அபராதமோ சிறைத்தண்டனையோ விதிக்கப்படலாம்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்