Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

அதிக நேரம் வேலைபார்க்கும் சிங்கப்பூர் ஆசிரியர்கள்

சிங்கப்பூரில் ஆசிரியர்கள் மற்ற நாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்களை விட அதிக நேரம் வேலை செய்கின்றனர்.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரில் ஆசிரியர்கள் மற்ற நாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்களை விட அதிக நேரம் வேலை செய்கின்றனர்.

Teaching and Learning International Survey 2018 (TALIS) எனப்படும் கற்பித்தல், கற்றல் தொடர்பான அனைத்துலக ஆய்வின் முடிவில் அந்தத் தகவல் வெளியிடப்பட்டது.

மற்ற நாடுகளில் ஆசிரியர்கள் வாரத்துக்குச் சராசரியாக 39 மணிநேரம் வேலை செய்கின்றனர்.

சிங்கப்பூரில் ஆசிரியர்கள் வாரத்துக்கு 46 மணி நேரம் வேலைசெய்கின்றனர்.

2013க்குப் பிறகு நிலவரத்தைப் பார்க்கும்போது 2018இல் ஆசிரியர்கள் வேலை செய்யும் நேரத்தில் 2 மணிநேரம் குறைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் ஆசிரியர்கள் வாழ்நாள் கற்றலில் ஈடுபடுவதுடன் தங்கள் கற்பிக்கும் திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்தி வருவதாக ஆய்வு தெரிவித்தது.

உலகளவில் சுமார் 48 கல்வி முறைகளைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. சிங்கப்பூரில் 3,300 ஆசிரியர்களும் தலைமையாசிரியர்களும் ஆய்வில் பங்கேற்றனர்.

சிங்கப்பூரிலுள்ள ஆசிரியர்கள் மாணவர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கில் ஆசிரியர் பணியைத் தேர்ந்தெடுப்பதாக ஆய்வு கூறியது. ஆசிரியர்கள் தங்கள் பணியில் தொடர்ந்து மேம்பட பள்ளிகளில் தகுந்த உதவி வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்