Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் வேலையின்மை விகிதம் 3.6%க்கு உயர்வு, ஆள்குறைப்பு 20,000-ஐத் தாண்டியது

சிங்கப்பூரில் செப்டம்பர் மாத நிலவரத்தின் படி வேலையின்மை விகிதம் 3.6% விழுக்காட்டிற்கு உயர்ந்துள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் வேலையின்மை விகிதம் 3.6%க்கு உயர்வு, ஆள்குறைப்பு 20,000-ஐத் தாண்டியது

(படம்: Marcus Mark Ramos)

சிங்கப்பூரில் செப்டம்பர் மாத நிலவரத்தின் படி வேலையின்மை விகிதம் 3.6% விழுக்காட்டிற்கு உயர்ந்துள்ளது.

பொருளியல் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் வேலையின்மை அதிகரிப்பு விகிதம் முந்திய மாதங்களை விட குறைந்தது.

ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்புநோக்க செப்டம்பரில் ஒட்டுமொத்த வேலையின்மை விகிதம் 0.2 விழுக்காடு உயர்ந்தது.

சிங்கப்பூர்வாசிகளில் 112,500 பேர் வேலையில்லாமல் உள்ளனர், அவர்களில் 97,700 பேர் சிங்கப்பூரர்கள்.

மூன்றாம் காலாண்டில் 9,100 பேர் ஆள்குறைப்புக்கு ஆளாகலாம் என்று அஞ்சப்படுகிறது.

அதனால், இந்த ஆண்டு, ஆள்குறைப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 20,450-க்கு உயரக்கூடும்.

உற்பத்தி, சேவை, கலை, விமானப் போக்குவரத்து சார்ந்த துறைகளில் ஆள்குறைப்பின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்