Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

விமானப் பயணங்களுக்குப் புத்துயிரூட்டும் வழிகள் - சிங்கப்பூரும் அமெரிக்காவும் ஆராயவிருக்கின்றன

சிங்கப்பூரும் அமெரிக்காவும் நோய்ப்பரவலுக்கு இடையே விமானப் பயணங்களுக்குப் புத்துயிரூட்டும் வழிகளை  ஆராயவுள்ளன.

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரும் அமெரிக்காவும் நோய்ப்பரவலுக்கு இடையே விமானப் பயணங்களுக்குப் புத்துயிரூட்டும் வழிகளை ஆராயவுள்ளன.

தடுப்பூசிச் சான்றிதழ்கள் உட்பட, பாதுகாப்பான முறையில் அனைத்துலக விமானப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது குறித்து இரு நாடுகளும் ஆராய்ந்துள்ளன.

போக்குவரத்து அமைச்சர் ஓங் யீ காங்கும் (Ong Ye Kung), அமெரிக்கப் போக்குவரத்து அமைச்சர் பீட் பூட்டஜீஜும் (Pete Buttigieg), காணொளி வழியே உரையாடினர்.

கிருமிப்பரவல் மீட்சி, பருவநிலை மாற்றத்தின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்துப் பேசப்பட்டது.

பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.

நகரப் போக்குவரத்து, அறிவார்ந்த போக்குவரத்து முறை போன்ற அம்சங்களில் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள இரு நாடுகளும் இணங்கியுள்ளன.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்