Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

வாக்காளர் பதிவேடு பொதுமக்களின் பார்வைக்குத் தயார் : சிங்கப்பூர் தேர்தல் துறை

சிங்கப்பூர் தேர்தல் துறை, வாக்காளர் பதிவேடு பொதுமக்களின் பார்வைக்குத் தயாராய் உள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.    

வாசிப்புநேரம் -

சிங்கப்பூர் தேர்தல் துறை, வாக்காளர் பதிவேடு பொதுமக்களின் பார்வைக்குத் தயாராய் உள்ளதாகத் தெரிவித்திருக்கிறது.

அதில் சுமார் 2.5 மில்லியன் வாக்காளர்களின் பெயர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

சமூக நிலையங்கள், பதிவு செய்யப்பட்ட சிங்கப்பூர் வெளிநாட்டுத் தூதரகங்கள், தேர்தல் துறையின் இணையத்தளம் ஆகியவற்றில் சிங்கப்பூர்க் குடிமக்கள் அவர்களின் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.

விவரங்களைச் சரிபார்க்க விரும்புவோர் அவர்களது அடையாள அட்டை அல்லது கடப்பிதழைக் கொண்டுசெல்லவேண்டும்.

சிங்கப்பூர் வாக்காளர் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டோர் எதிர்வரும் தேர்தல்களில் வாக்களிக்க மீண்டும் பதிவு செய்துகொள்ளலாம்.

வெளிநாட்டில் வசிக்கும் சிங்கப்பூர்க் குடிமக்கள், சிங்கப்பூர் வெளிநாட்டுத் தூதரகங்களில் வாக்களிக்க ஒவ்வொரு முறையும் பதிவு செய்துகொள்ள வேண்டும்.    

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்