Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் பத்தில் 7 நிறுவனங்களில் பன்முகத்தன்மை, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கும் கொள்கைகள் ஆகியன இல்லை

சிங்கப்பூரில் உள்ள பத்தில் 7 நிறுவனங்களில் பன்முகத்தன்மை, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கும் கொள்கைகள் ஆகியன இல்லை என்று தெரியவந்துள்ளது.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூரில் பத்தில் 7 நிறுவனங்களில் பன்முகத்தன்மை, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கும் கொள்கைகள் ஆகியன இல்லை

(கோப்புப் படம்: TODAY/Nuria Ling)

சிங்கப்பூரில் உள்ள பத்தில் 7 நிறுவனங்களில் பன்முகத்தன்மை, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கும் கொள்கைகள் ஆகியன இல்லை என்று தெரியவந்துள்ளது.

இருப்பினும் 62 விழுக்காட்டு நிறுவனங்கள் ஊழியர்களை வேலைக்கு எடுப்பது, பதவி உயர்வு ஆகியவற்றின்போது அத்தகைய அம்சங்களைக் கவனத்தில் கொள்கின்றன.

சிங்கப்பூர்த் தேசிய முதலாளிகள் சம்மேளனமும், Kincentric உலக ஆலோசனை நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்தாய்வில் அது தெரியவந்தது.

19 துறைகளைச் சேர்ந்த 186 நிறுவனங்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

குழு மேலாளர்கள் திறமையின்றி, பாகுபாடு இல்லாமல் குழுக்களை நிர்வகிக்கத் தவறுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இரு பாலர் சம்பள இடைவெளி, வாழ்க்கைத் தொழில் முன்னேற்றம், சமத்துவமின்மை ஆகியவற்றைப் பற்றிப் போதிய தகவல்கள் இல்லை.

தற்போதுள்ள வளங்களைப் பயன்படுத்தி, வேலையிடத்தில் ஒற்றுமையை வலுப்படுத்த முதலாளிகளிடம் வலியுறுத்தப்பட்டது.

அதுபோன்ற நடவடிக்கைகளுக்கு, சமூக ஒருங்கிணைப்பு நிதி 80 விழுக்காடு வரை மானியங்களை வழங்குகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்