Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

கூடுதல் வசதிகளுடன் செயல்பாட்டைத் தொடரும் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையின் தீப்புண் காயங்கள் நிலையம்

சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையின் தீப்புண் காயங்களுக்கான நிலையம், மேலும் சிக்கலான சூழ்நிலைகளைக் கையாளும் வசதிகளோடு மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

வாசிப்புநேரம் -
கூடுதல் வசதிகளுடன் செயல்பாட்டைத் தொடரும் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையின் தீப்புண் காயங்கள் நிலையம்

(படம்: CNA)

சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையின் தீப்புண் காயங்களுக்கான நிலையம், மேலும் சிக்கலான சூழ்நிலைகளைக் கையாளும் வசதிகளோடு மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.

15 மாதங்களாக அங்கு நடைபெற்ற சீரமைப்புப் பணிகள் அதற்குக் காரணம்.

1962ஆம் ஆண்டிலிருந்து அந்த நிலையம் செயல்பட்டு வருகிறது.
நோயாளிகளின் உயர்-கவனிப்புக்கும், அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கும் அங்கு பத்து அறைகள் உள்ளன.

தட்பவெப்ப நிலையை வேண்டியபடி மாற்றியமைக்கும் வசதிகொண்ட இரண்டு அறுவை சிகிச்சை அரங்குகளும் நிலையத்தில் உண்டு.

தீக் காயத்துக்கு ஆளானவர்கள் அதிகமானோர் ஒரே நேரத்தில் சிகிச்சைக்கு வரும்போது, பழைய, புதிய நோயாளிகளுக்கு இடையே கிருமிகள் பரவுவதைத் தடுக்க அறைகளுக்கு இடையே தடுப்புச் சுவர்களும் உள்ளன.

கே.கே. மகளிர், சிறார் மருத்துவமனை போன்ற மற்ற மருத்துவமனைகளிலும், தீப்புண் நிர்வாக வசதியை மேம்படுத்த சுகாதார அமைச்சு திட்டமிடுகிறது.

சுகாதாரத்துக்கான மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின், 12வது ஆசிய பசிபிக் தீப்புண் காயங்களுக்கான கூட்டத்தின் தொடக்க விழாவில், அதனைத் தெரிவித்தார்.

அந்த மூன்று நாள் கூட்டத்தில் உள்ளூரையும், 22 வெளிநாடுகளையும் சேர்ந்த 500க்கும் அதிகமான மருத்துவர்களும் நிபுணர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்