Images

அடுத்த வாரம் தீபாவளி ஒளியூட்டு - லிட்டில் இந்தியா தயார் (காணொளி)

சிங்கையில் தீபாவளி என்றாலே லிட்டில் இந்தியாவின் தீபாவளி ஒளியூட்டுதான் நினைவுக்கு வரும். இவ்வாண்டு ஒளியூட்டு அடுத்த வாரம் 22ஆம் தேதி தொடங்கும்.

அதற்காக ஆயத்தமாகி வருகிறது லிட்டில் இந்தியா வட்டாரம். இன்னும் ஒரு வாரம் எஞ்சியுள்ள வேளையில் சாலைகளை அன்னங்கள் கொண்ட வளைவுகள் அலங்கரிக்கின்றன.

லிட்டில் இந்தியா கடைக்காரர்கள், மரபுடைமைச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒவ்வோர் ஆண்டும் ஏற்பாடு செய்யப்படும் தீபாவளி ஒளியூட்டு லாவண்டர் சாலையை ஒட்டிய சிராங்கூன் சாலைச் சந்திப்பில் தொடங்கி கிச்சனர் சாலையை ஒட்டிய சிராங்கூன் சாலைச் சந்திப்போடு முடிவடையும்.

அடுத்த வாரம் தொடங்கி நவம்பர் மாதம் 25ஆம் தேதிவரை நீடிக்கவிருக்கிறது ஒளியூட்டு, தீபாவளிக்கென சிறப்பு நிகழ்ச்சிகளும் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அலங்காரங்களைப் பார்க்கும் போது பண்டிகை உணர்வும் வருகிறது அல்லவா?

Top