Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

சிங்கப்பூர் இந்தியப் பெண்களின் மனநலம்: பேணிக் காக்கப்படுகிறதா? #CelebratingSGWomen

அலுவலகப் பெண். அன்பான மனைவி. பொறுப்பான தாய். இப்படிப் பல பரிமாணங்களைத் தயங்காமல் ஏற்று, ஒவ்வொன்றையும் சிறப்பாகச் செய்பவர்கள் பெண்கள் எனப் பாராட்டு மழை பொழியப்படுவது உண்டு. ஆனால், அந்தப் பாராட்டு மழை, சூறாவளியாவது எப்போது?

வாசிப்புநேரம் -

அலுவலகப் பெண். அன்பான மனைவி. பொறுப்பான தாய்.

இப்படிப் பல பரிமாணங்களைத் தயங்காமல் ஏற்று, ஒவ்வொன்றையும் சிறப்பாகச் செய்பவர்கள் பெண்கள் எனப் பாராட்டு மழை பொழியப்படுவது உண்டு.

ஆனால், அந்தப் பாராட்டு மழை, சூறாவளியாவது எப்போது?

பெண் என்பவள் அலுவலக வேலை, குடும்பம் என இரண்டையும் சிறப்பாகக் கையாளக்கூடியவள் என்ற பிம்பம் 21ஆம் நூற்றாண்டில் நிலவத் தொடங்கியது.

ஆனால் அதில் மாட்டிக்கொண்டு திணறுகின்றனர் சில பெண்கள்.

சிக்கித் தவிக்கிறது அவர்களின் மனநலம்.

(படம்: AP)

கோப்புப் படம்: AP

நம் சிங்கப்பூர் இந்தியப் பெண்களும் அதற்கு விதிவிலக்கல்ல.

#CelebratingSGWomen எனச் சிங்கப்பூர் பெண்களைக் கொண்டாடும் இந்த ஆண்டில், பெண்கள் எதிர்நோக்கும் மனநலச் சிரமங்களைச் சற்று ஆராய்வோம்.

குறிப்பாக, சிங்கப்பூர் இந்தியப் பெண்களின் மனநலத்தில் சற்று கவனம் செலுத்துவோம்.

அவர்களின் மனநலம் பேணிக் காக்கப்படுகிறதா?

இல்லை என்கின்றனர் மனநல நிபுணர்கள்.

உடல் சம்பந்தப்பட்ட நோய்கள் அளவுக்கு, மனநலம் சம்பந்தப்பட்ட நோய்கள் முக்கியமாகக் கருதப்படுவதில்லை.

என்றார் மூத்த குடும்ப நல ஆலோசகரான திருமதி லக்ஷ்மி அழகப்பன்.

"அவை மூடி மறைக்கப்படுகின்றன. மனநோயால் அவதிப்படுவது என்பது பலராலும் அவமானமாக நினைக்கப்படுகிறது." என்றார் அவர்.

மனநல நோய்கள், நம் இந்தியச் சமுதாயத்தில் கொஞ்சம்கூட பொருட்படுத்தப்படுவதில்லை என்று மனநல ஆலோசகர் குமாரி பிரியாநிஷா குறிப்பிட்டார்.

அதிலும், இந்தியப் பெண்களின் மனநலத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படுவது இல்லை.

இந்தியத் திரைப்படங்களில் மனநலம் சித்தரிக்கப்படும் விதம், மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுவோர் சமுதாயத்தில் எதிர்நோக்கும் சிக்கல், புனைப்பெயர்கள், மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்ற அச்சம் ஆகியவை அதற்கான சில காரணங்கள்.

என்று குமாரி பிரியாநிஷா சுட்டினார்.

சிங்கப்பூர் இந்தியப் பெண்கள், எத்தகைய மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்?

அது குறித்து மேலும் ஆராய்வோம், அடுத்த வாரம்... 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்