Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

சிங்கப்பூர்

'தேவையான பொருள்களை இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்... கேள்வி கேட்கப்படாது' - 7 வயதுச் சிறுமியின் திட்டம்

பள்ளி விடுமுறையின்போது விளையாட வேண்டும், வெளியே செல்ல வேண்டும் எனப் பிள்ளைகளுக்கு நிறைய ஆசைகள் இருப்பது வழக்கம்.

வாசிப்புநேரம் -

பள்ளி விடுமுறையின்போது விளையாட வேண்டும், வெளியே செல்ல வேண்டும் எனப் பிள்ளைகளுக்கு நிறைய ஆசைகள் இருப்பது வழக்கம்.

ஆனால், தனது ஜூன் மாதப் பள்ளி விடுமுறையை மற்றவர்களுக்குப் பயனுள்ள வழியிலும் செலவிட வேண்டும் என்பது 7 வயது ஷக்தியின் விருப்பம்.

அதற்காக அவர் தொடங்கிய திட்டம்?

Shakthi's Share & Care corner.

(படம்: Jmaleni Saravanan)

(படம்: Jmaleni Saravanan)

அதற்கு உந்துகோலாக இருந்தது, ஷக்தி பயிலும் லியன்ஹுவா தொடக்கப்பள்ளி என்கிறார் அவரது தாயார் ஜேமாலினி சரவணன் (Jmaleni Saravanan).

ஜூன் விடுமுறையின்போது Passion Project என்கிற மனத்திற்கு விருப்பமான ஒரு திட்டத்தை உருவாக்குமாறு, பள்ளி, மாணவர்களை ஊக்குவித்தது.

ஏற்கெனவே Project Smile என்ற திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாதமும், பள்ளி, உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு உணவுப் பொருள்களை வழங்கி வருகிறது.

அதைத் தனிப்பட்ட முறையிலும் செய்ய வேண்டும் என்பது ஷக்தியின் ஆசை

என்றார் திருமதி ஜேமாலினி.

அதை அடுத்து, இம்மாதம் (ஜூன்) முதல் தேதி தொடங்கியது ஷக்தியின் திட்டம்.

(படம்: Jmaleni Saravanan)

(படம்: Jmaleni Saravanan)

வீட்டுக்கு வெளியே, ஒரு மேசையில் அத்தியாவசியப் பொருள்கள், உணவுப் பொருள்கள், பானங்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

(படம்: Jmaleni Saravanan)

(படம்: Jmaleni Saravanan)

அவை 3 நாள்களுக்கு ஒரு முறை அல்லது, தேவைப்படும்போது மீண்டும் நிரப்பப்படுகின்றன.

யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமென்றாலும், அங்கிருந்து தேவைப்படும் பொருள்களை எடுத்துக்கொள்ளலாம்.

எந்தக் கேள்வியும் கேட்கப்படாது என்கிறார் திருமதி ஜேமாலினி.

(படம்: Jmaleni Saravanan)

(படம்: Jmaleni Saravanan)

மக்கள் மனமுவந்து நன்கொடை கொடுத்து, ஆதரவு அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்