Images
  • shamugam on FB (1)

அவதூறான கட்டுரையை அகற்றப் போதுமான காரணங்கள் இல்லை என்றது Facebook: அமைச்சர் சண்முகம்

சிங்கப்பூரின் சட்ட அமைச்சு, பொய் தகவல்களை அடையாளம் கண்டு நீக்கவும்,அவைப் பரவுவதைத் தடுக்கவும் Facebookகை சார்ந்திருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.

1MDB விசாரணையில் சிங்கப்பூர் பிரதமரைத் தொடர்புப்படுத்தி States Times Review இணையத்தளம் பதிவேற்றம் செய்த தகவலை Facebook அகற்ற மறுத்ததைத் தொடர்ந்து சட்ட அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பதிவேற்றம் செய்யப்பட்டதை அகற்றப் போதுமான காரணங்கள் இல்லை என்று Facebook கருதுவதாக சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறினார்.

அந்தப் பதிவு பொய்யானது, அவதூறானது. பொய்த் தகவல்களின் மூலம் அந்தப் பதிவு சிங்கப்பூரைத் தாக்குகிறது என்றும் அவர் கூறினார்.

இத்தகைய விவகாரங்களில் சிங்கப்பூரில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்படுவதற்கான அவசியத்தை இது எடுத்துக்காட்டுவதாக அமைச்சர் சொன்னார்.

மலேசியாவில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்திடம் தெளிவுபடுத்திய பிறகு தீய நோக்கத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட தகவலை இதர மலேசியப் பதிப்பகங்கள் அகற்றிவிட்டதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

1MDB அதிகாரிகளின் அடுத்த இலக்கு சிங்கப்பூர் என்று Sarawak Report இணையத் தளம் குறிப்பிட்டுள்ளதாகச் சொல்லப்படுவதை அந்தத் தளமே நிராகரித்துவிட்டதை சட்ட அமைச்சு சுட்டியுள்ளது.


 

Top